மன நலம் காப்போம்!

மன நலம் காப்போம்!

ஆறறிவு என்பது பகுத்தல் என்பதில் தொடங்கி, சிந்தனையின் பரிணாமத் தோன்றல்கள்தான் இன்றைய அறிவியல் விஞ்ஞானமும் அதன் வளர்ச்சியும்!

ஐந்தறிவு கொண்ட காரணிகள் தங்களது கோப, தாபங்களை இயற்கையாகவே வெளிப்படையாகக் காட்டி, அதற்கு வடிகால்களை அவைகளே தேடிக் கொள்கின்றன. ஆனால் நமது மனித இனம் இடம், பொருள், ஏவல் பார்த்து, அதன் சூழ்நிலைகளுக்கு உட்பட்டே தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் மனஉளைச்சல் என்ற சாத்தானின் பிடிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் இந்த சாத்தானை விட்டு வெளியேறும் சூத்திரத்தை வெளியே தான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கான மாற்றுமருந்து, அவர்களுக்குள்ளேயே தான் இருக்கிறது என்ற ரகசியம் எத்தனை பேருக்குத் தெரிய வாய்ப்பிருக்கிறது?

இம்மாதிரியான மனநோயைக் கண்டறிய மனிதர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள் வல்லுநர்கள். இந்த இரண்டு வகைகளும், அவர்களது வாழ்க்கை நெறி, கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள், நடைமுறை இயல்புகள் இவைகளைக் கொண்டே கணிக்கப்படுகிறது.

கடவுள்பாதி, மிருகம் பாதி என்ற பாடலுக்கேற்ப இரட்டைத் தன்மை உடையவர்களும், தங்களுக்கு சவுகரியமான முகமூடியை சமுதாயத்திற்கு முன்னே அணிந்து கொள்கிறார்கள்.

முதலாவது வகையைச் சார்ந்தவர்கள்:  1. இவர்கள் தங்களது இயல்புகளை வெளியே காட்டத் தயங்காதவர்கள். கோபம், சிரிப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Hostile என்று கூறுவார்கள். இவர்கள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவார்கள்.

இரண்டாம் வகை மனிதர்கள்:   2. மேலே சொன்ன இயல்புகள் எதுவும் இல்லாமல் இருப்பவர்கள், (Positive thoughts) சொல்லும் வேலைகளை முகம் சுளிக்காமல் செய்வது, விட்டுக்கொடுக்கும் தன்மை, தவறுகளை யாரும் சுட்டிக் காட்டினால் அதனை ஏற்றுக் கொள்வது, மற்றவர்களின் நேர்மைக்கு மரியாதை கொடுப்பது ஆகியவை,

மன உளைச்சல் இல்லாத மனிதன் இல்லை! இதுவும் மனித இயல்பு தான்! ஆனால் இந்த மனஉளைச்சலில் இருந்து விடுபட்டு, அதைக்கடந்து வந்து வாழ்க்கைப் பாதையில் நடந்தேற வேண்டும். அதில்தான் நம் மனதைக் கட்டுப்படுத்தும் வெற்றியும் இருக்கிறது.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top