குழந்தைகளை முதன்முறை பள்ளியில் சேர்த்திருக்கீங்களா?

குழந்தைகளை முதன்முறை பள்ளியில் சேர்த்திருக்கீங்களா?

'நீண்ட நாட்களாக தாய் பறவையின் நிழலில் பாதுகாப்பாக இருந்த குஞ்சுப் பறவைகளை, சட்டென பறக்க கற்றுக் கொடுப்பது போல தான், இன்று ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் மூன்று வயதான குழந்தைகளைப் பள்ளியில் அவர்களின் வாழ்வைத் துவங்க சேர்த்து விடுகிறார்கள். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கி சுற்றி வந்த குழந்தைகளை பள்ளியில் சட்டென சேர்ப்பது அவர்களுக்கு அதிகமான பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தான் குழந்தைகள் பள்ளிக்கு வரப் பயப்படுகிறார்கள்.' எனகிறார் மதுரை யூரோ கிட்ஸ் குழந்தைகள் பள்ளியின் சென்டர் ஹெட் திருமதி. சங்கீதா அவர்கள்.

புதியதாக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் மனநிலை, அவர்களை தயார்படுத்துதல் மற்றும் அவர்களை புதிய சூழலுக்கு ஏற்ப உருவாக்குதல் பற்றிய விஷயங்களை அவர்களிடம் பேசினோம்.

ஒரு குழந்தையின் அனுபவம்.. பெரிய பள்ளியிலும், ப்ளே ஸ்கூல்களிலும்..

ஒரு குழந்தை தன்னுடைய தாய், தந்தை மற்றும் குடும்பத்தைப் பிரிந்து சில மணி நேரங்கள் வேறு இடங்களில் இருக்கப் போகிறார்கள். எனவே, அவர்கள் இருக்கப்போகும் இடமானது மிகவும் முக்கியம் வாய்ந்தது. மேலும், 2 வயது முதல் 5 வயது வரை ஒரு குழந்தையின் கற்றுக்கொள்ளும், கவனிக்கும் ஆற்றல் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும், ஒரு மனிதனுக்கு தம்முடைய வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள போகும் மொத்தப் படிப்பில் 70 சதவீதம் இந்த பருவத்தில் தான் கற்றுக் கொள்கிறார்கள். எனவே அவர்களை ப்ளே ஸ்கூலில் சேர்க்கும் போது அவர்களுக்கு தனி அக்கறையளிக்கப்பட்டு வருகிறது.

இன்று குழந்தைகளே ஆண்ராய்டு, கணிணியை பயன்படுத்துகிறார்களே.. அதைப் பற்றி..

இன்றைய குழந்தைகள் மிகவும் ஸ்மார்ட். இதனால் பெற்றோர்களே குழந்தைகளை அமைதியாக வைக்க கையில் ஆண்ராய்டு போன்களோ அல்லது டிவியோ போட்டு அதன் முன் உட்காற வைத்துவிட்டுப் போகிறார்கள். இது ஒரு 20 நிமிடம் என்றால் பரவாயில்லை. ஆனால் இந்நிலையே தொடர்ந்தால் அவர்கள் கேம்ஸ், கார்டூன்ஸ்களுக்கு அடிமைகளாகி ஒரே இடத்திலேயே அமர்ந்துவிடுகிறார்கள். இது அவர்களை உடல் ஆரோக்கியமில்லாத நிலைக்கு கொண்டு செல்கிறது. பெரும்பாலும் ஒன்றரை வயது முதல் இரண்டு வயது குழந்தைகளில் இதை நாம் அதிகம் காணமுடியும்.

குழந்தைகளை முதல் முறை பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வருவது பற்றி..

எங்களைப் பொருத்தவரை நாங்கள் பள்ளித் துவங்கும் பத்து நாட்களுக்கு முன்பதாகவே பெற்றோர்களை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்துவோம். அதில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர அவர்களை எப்படி மனதளவில் தயார்ப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துவோம். இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளியில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் இருக்கும், நிறையப் புதிய மக்கள் இருப்பார்கள் என சொல்லி, அங்கு நிறைய அழும் குழந்தைகள் இருக்கும், அப்பா அம்மா கூட இருக்க மாட்டோம் என்பதை சொல்ல மறந்துவிடுகிறார்கள். இதை அனைத்தும் சொல்லி அவர்களை தயார் படுத்த வேண்டும். இதனால் எங்களிடம் வரும் குழந்தைகள் சுமார் 2-3 நாட்களுக்குள் பள்ளிக்கு பழக்கமாகிவிடுகிறார்கள்.

இன்று அதிகமான ப்ளே ஸ்கூல்களை நாம் காண முடிகிறது.. அதில் எப்படி சரியான பள்ளியை தேர்ந்தெடுப்பது?..

ப்ளே ஸ்கூல் என்பது ஒரு குழந்தைக்கு முக்கியமான ஒன்று. எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் போதும் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதிலும் ஒரு சிலப் பள்ளிகளிலும் டேப், ப்ரேஜெக்டர்களில் வகுப்பு நடத்துகிறார்கள். இது எல்லாம் ஒரு நாளுக்கு 20-25 நிமிடங்கள் மட்டும் இருந்தால் போதும். ஆனால் அது தான் முழுக்க முழுக்க வகுப்பு நடத்தும் விதமென்றால் அது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது.

ப்ளே ஸ்கூலில் குழந்தைகளுக்கு என்னென்ன கிடைக்கும்?

முதலில் அந்த குழந்தையை அதன் வயதில் உள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பழக விடுவதுண்டு. மற்றவர்களோடு உணவு மற்றும் விளையாட்டுப் பொருட்களை பகிர்ந்து கொள்வது. அத்தோடு வீடுகளில் அவர்களுக்கு கிடைத்த விஷயங்களை ப்ளே ஸ்கூல்களிலும் அளிக்கப்படும். உதாரணத்திற்கு நாம் நமது குழந்தைகளை மண்ணிலோ, தண்ணீரிலோ விளையாட விடுவதில்லை. ஆனால் நம்முடைய காலங்களில் பெரும்பாலான நேரங்களை நாம் மண்ணிலும் தண்ணீருலுமே கழித்திருக்கிறோம். எங்களுடைய பள்ளியிலேயே இவையணைத்தையும் கொண்டுள்ளோம். உதாரணத்திற்கு இன்று பெரும்பாலான குழந்தைகள் பொதுப் பேருந்துகளில் பயணித்ததில்லை. எனவே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பயணச்சீட்டு என்றால் என்ன, ஓட்டுநர் யார்,  நடத்துநர் யார் என அனைத்தையும் கற்பிப்போம்.

சரியான தொடுதல், தவறான தொடுதல் பற்றி குழந்தைக்கு கற்பிப்பது பற்றி..

நிச்சயம்.. இன்று இது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதைப் பற்றி போன கோடை விடுமுறை வகுப்புகளிலும் குழந்தைகளுக்கு பொம்மைகளைக் கொண்டு கற்பித்தோம். யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக்கூடாது. யார் தொடலாம், யார் தொடக்கூடாது, எங்கு தொடலாம், எங்கு தொடக்கூடாது என அனைத்தையும் மூன்று வயதுக்கு மேலான குழந்தைக்கு கற்பிக்கிறோம்.

யூரோ கிட்ஸ் பள்ளிப் பற்றி..

யூரோ கிட்ஸ் என்பது உலகளவில் கிளைகளைக் கொண்டுள்ள சர்வதேச தரத்திலான குழந்தைகள் பள்ளி. இது உலகளவில் ஓரே பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளதால், சிங்கப்பூர்pல் உள்ள குழந்தை கற்றுக்கொள்ளும் பாடமும், மதுரையில் உள்ள குழந்தை கற்றுக்கொள்ளும் பாடமும் ஒரே பாடமாகத் தான் இருக்கும். குழந்தைகளுக்கு பொதுவாக பார்த்தல், கேட்டல், நுகருதல், தொடுதல், சுவைத்தல் போன்ற ஐந்தும் உணரக் கூடியவை. ஆனால், குழந்தைகளைப் பொருத்தவரையில் சிலருக்கு பார்த்து கற்றுக்கொள்வதும், சிலருக்கு கதை கேட்டுக் கற்றுக்கொள்வதும். சிலருக்கு செய்து பார்த்து கற்றுக் கொள்வதும் தான் பிடிக்கும். எனவே, இதை அறிந்துக்கொள்ளும் அளவிலான ஆசிரியர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் அளவில் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 8754116266

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top