சீண்டாதீர்கள் சீனப் பட்டாசை!

சீண்டாதீர்கள் சீனப் பட்டாசை!

ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்ய முடியாத கரிசக் காட்டு பகுதிகளை கொண்ட சிவகாசி வட்டாரத்தில் பட்டாசு தொழில் தொடர்ந்து பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது. லட்சணக்கான மக்கள் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு வாழுகின்ற ஏழை மக்களுக்கு பட்டாசுத் தொழில் ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தை அளித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், சீன பட்டாசுகளின் கள்ளத்தனமான வரவு சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பெரியளவில் பாதிக்கின்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றது. சீனப் பட்டாசுகள் மிகவும் ஆபத்தானவை என்பதை நம் மக்கள் அறியாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. சீனப்பட்டாசுகளில் சேர்க்கப்படும் வேதியல் பொருட்கள் குளோரைடை அடிப்படையாக கொண்டதாகும். இது மிகவும் வீரியம் கொண்டதாகவும், எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். சாதாரணமாக சிவகாசி பகுதியில் பட்டாசுகள் அனைத்தும் நைட்ரேட் வேதியல் பொருட்களை மட்டுமே சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக ஆபத்து இருப்பதில்லை. குறைந்த நேரத்தில் மிக அதிகமான பட்டாசுகளை உருவாக்கும் தொழில்நுட்பம் சீன பட்டாசுகளுக்கே உரியதாகும். எனவே ஆபத்தை உருவாக்கி நம் சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் சீனப்பட்டாசைத் தீண்டதகாத பொருளாக மதித்து ஒதுக்க வேண்டியது நம் கடமையாகும். சிவகாசியின் ஒவ்வொரு பட்டாசிலும் ஒரு ஏழைத் தொழிலாளியின் வாழ்க்கை மறைந்து இருப்பதை நாம் உளப்பூர்வமாக உணர்ந்து அவற்றைச் சீண்டாமல் விட்டு விட வேண்டும்.

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top