ஆன்லைன் ஷாப்பிங் - உஷார்!
Posted on 17/10/2016

அறிவியல் தொழில்நுட்பவளர்ச்சியால் ஆன்லைன் ஷாப்பிங் இப்போது மிக அதிக அளவில் வளர்ச்சி அடைந்துவிட்டது. கூட்ட நெரிசலில் அலைவது, கடை கடையாய் ஏறி இறங்குவது, மிக அதிகமான நேரத்தை செலவிடுவது ஆகியவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காக பெரும்பாலான மக்கள் முக்கியமாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கை பெரிதும் விரும்புகின்றார்கள்.
ஆன்லைன் வியாபாரத்தை பெருக்கும் யுக்தியில் அதிகபட்சம் 80% தள்ளுபடி என்பது போன்ற விஷேச அறிவிப்புகளை வெளியிட்டு இணையதள வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். இப்பேற்பட்ட அதிகபட்ச தள்ளுபடிகளை உத்தரவாதமுள்ள பிராண்டட் கம்பெனி தயாரிப்புகள் விற்கப்படுவதில்லை. அறிமுகமில்லாத தரம் குறைந்த பொருட்களை எளிதில் விற்பதற்காக மிக அதிகமான விலையை நிர்ணயம் செய்து தள்ளுபடியும் அதிகமாக கொடுத்து நூதனமான வியாபார யுக்தியை கையாளுகிறார்கள்.
ஆன்லைன் வியாபாரத்தில் காணப்படும் மற்றும் ஒரு அபாயம், பொருட்களை நேரடியாக தொட்டு பார்த்து, தரத்தை உணர்ந்து வாங்க இயலாமல் உள்ளது தான். எனவே செலுத்தும் தொகைக்கு சமமான பொருட்கள் பெரும்பாலான ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைப்பதில்லை.
ஆகவே ஆன்லைன் மூலமாக பொருட்களை கொள்முதல் செய்யும் நுகர்வோர் மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இதற்கான நிபந்தனைகளை அறிந்த பின்னர் கொள்முதல் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அத்துடன் ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்கள் சம்பந்தமான சேவை மையங்கள் உள்ளூரில் இருக்கின்றனவா என்பதையும் ஆராய்ந்து வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டும்.
Tags: News, Madurai News, Lifestyle