பிரதமர் அறிவிப்பால் அப்பார்ட்மெண்ட் விற்பனையாளர்களுக்கு பாதகமில்லை!

பிரதமர் அறிவிப்பால் அப்பார்ட்மெண்ட் விற்பனையாளர்களுக்கு பாதகமில்லை!

அதிநவீன பாணிகளு டன் மிகச் சிறந்த உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு உபகரணங்களுடன் கட்டுமான பணிகள் இப்போது தமிழ்நாட்டிலும் ஒரு அற்புதமான உயர்வை எட்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மிக அதிகமான போட்டியுள்ள ஒரு துறை தான் கட்டுமான துறை.

எனவே இதில் பல வரு டங்களாக ஈடுபட்டு புகழு டன் இருப்பவர்களும், அண்மை காலத்தில் இந்த துறையில் காலடி எடுத்து வைத்துள்ளவர்களும் இயற் கையாகவே கட்டிடங்களின் தரத்திற்கும், அதன் சரியான விலைகளுக்கும் உத்திரவா தம் அளித்து வருகின்றார் கள். எனவேதான் இந்த துறையில் கடுமையான போட்டி நிலவிய போதும் தொழில் வளமான வளர்ச்சியையும் ஒருபக்கம் அடைந்து கொண்டேயிருக்கின்றது என்று கூறலாம்.

மதுரையை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டி ருக்கும் “சிவா ஷெல்டர்ஸ்” என்னும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு.கதிரேஸ் சுந்தரம் அவர்களை அட்வென்சர் இதழுக்காக சந்தித்து கட்டுமான தொழில் பற்றியதான மிக சமீபத்திய விபரங்களை அறிய விரும்பினோம். 

* தங்களின் தந்தை சிவா ஷெல்டர்ஸின் தலைவர் மற் றும் நிறுவனர் என்பதை அனைவரும் அறிவார்கள். அவரின் புதல்வராகிய தாங் கள் எப்படி இந்த கட்டுமான துறைக்கு அறிமுகமானீர் கள்? என்பதை எங்களுக்கு சற்றே விவரியுங்கள். 

நான் அடிப்படையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவன் ஆவேன். இருந்தாலும் எனக்கு ஏற்றவாறு ஒரு பணி வெளிநாட் டில் தகவல் தொடர்பு துறை யில் கிடைக்கப் பெற்றது. ஆகவே இந்த பணியை சந் தோஷமாக ஏற்றிக் கொண்டு நான் லண்டனுக்குச் சென்று தகவல் தொடர்பு துறையில் சுமார் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து பணியாற்றி னேன். பிறகு கட்டிடக் கலைத் துறையில் ஈடுபட் டுள்ள என் தந்தைக்கு ஒத் தாசையாக இருக்க வேண்டு மென்பதற்காக லண்டன் பணியை உதறித் தள்ளி விட்டு மதுரைக்கு வந்து விட் டேன். கடந்த மூன்றாண்டு காலமாக மதுரையிலும் மற் றும் இதர இடங்களிலும் எனது தந்தையாரால் நிறை வேற்றப்பட்டு வரும் கட்டு மான திட்டங்களை அருகிலி ருந்து மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகின்றேன். 

* பொதுவாகவே தமிழ்நாட் டில் கட்டுமான தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் மிகுந்த பின்னடைவில் உள்ள தாக சொல்லப்படுகின்றதே இது பற்றி தங்களின் மேலான கருத்துக்களை சொல்லுங்கள்

பத்திரப்பதிவுத் துறை யின் மூலமாக அண்மை காலத்தில் வெளியிடப்பட்ட சில உத்தரவுகளின் பலனாக வும், அதை தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறி விக்கப்பட்ட பின்பும், கட்டு மானத்துறை மற்றும் ரியல் எஸ்டேட் வணிகங்களில் ஒரு நிலையற்ற தன்மை இருந்தது உண்மை தான். ஆனாலும் அது சில காலமே நிலவியது. இப்போது இந்த இரண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட்டன. இருந்த போதிலும் கட்டுமானத் தொழிலும் ரியல் எஸ்டேட் தொழிலும் மிகுந்த பாதிப்பு களுக்கு உள்ளாகிவிட்டதை போலும் சில ஊடகங்கள் மக் களை பீதி அடைய செய்து விட்டன. சில ஊடகங்கள் இன்னும் ஒரு படி முன்னே சென்று இப்போது இந்த இரண்டு துறைகளிலும் 30% விலை குறைந்து விட்டது என்றும் பரப்பி விட்டார்கள். ஆனால் இது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயமா கும். நல்ல வீடுகளை தரமாக கட்டி சரியான விலைக்கு மக் களுக்கு விற்க உட்படும் கட்டுமான நிறுவனங்கள் கண்டிப்பாக எந்த கார ணத்தை கொண்டும் திடீ ரென்று 30 விழுக்காடு குறைத்து விற்க மாட்டார்கள். அப்படி செய்தால், அடிப் படையில் தரத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்பதை எளிதில் நாம் புரிந்து கொள் ளலாம். இப்போதைய நிலை யில் குறைந்த லாபத்துடன் சரியான மற்றும் தரமான வீடுகளை உருவாக்கித் தர வேண் டும் என்பது தான் எங்களு டைய தலையாய நோக்கமாக இருக்கின்றது.

உண்மையை சொல்ல போனால். பழைய நோட்டு கள் செல்லாது என்று அறி வித்ததை முன்னிட்டு, கட்டு மானம் மற்றும் ரியல் எஸ் டேட் தொழில்களுக்கு மிகுந்த நன்மையே உண் டாகி உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென் றால் வீட்டு கடன்களுக்கான வட்டியானது இந்த நடவடிக் கையால் பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின் றது. தவிரவும் கட்டுமான நிறுவனங்களிடம் வீடுகள் வாங்குவதற்கு வாடிக்கையா ளர்கள் நேர்மையான முறை யில் வங்கி மற்றும் இதர நிறு வனங்களிடம் கடன்களை பெறுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் களில் யாரும் கள்ள நோட் டையும், கள்ளப் பணத்தை யும் இந்த நல்ல காரியத்திற் காக கையாள்வதில்லை என் பது நிதர்சனம். 

* மிக சமீபத்தில் தங்கள் தந்தையாருடன் தாங்கள் முன்னின்று கட்டி முடித்த கட்டிட திட்டங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

சென்னைக்கு அருகில் பெருங்குடி என்னும் இடத் தில் சுமார் மூன்றரை கோடி திட்ட மதிப்பிற்கு மேற்பட்ட கட்டுமான பணி ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். இதில் எல்லா வேலைகளும் தற்போது முடிக்கப்பட்டு நிறைவு பெற்று உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஐந்து வில்லாக்கள் மிகச் சிறப்பாக கட்டி முடிக்கப்பட் டுள்ளன. இந்த இடமானது டைடல் பார்க்கிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத் தில் அமைய பெற்றிருக்கின் றது. இந்த திட்டத்தில் அமை யப் பெற்றுள்ள வில்லாக் களும் கிட்டத்தட்ட விருப் பமுள்ளவர்களுக்கு ஒதுக் கீடுகளும் செய்யப்பட்டு விட்டன. இங்குள்ள வில்லாக்கள் எந்த குறை யுமின்றி முடிக்கப்பட்டுள் ளது எங்களுக்கு மிகுந்த  திருப்தியை அளிக்கின்றது.

மதுரை பீபீ குளத்தில் ஸ்ரீ துளசி என்னும் கட்டுமான திட்டம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. இதனில் 12 அப் பார்ட்மெண்ட்டுகள் இடம் பெற உள்ளன. இரண்டு மற் றும் மூன்று படுக்கையறை கள் கொண்டவைகள் இடம் பெற உள்ளன. தற்போது நிறைவு பெற்று வரும் இந்த திட்டமானது வருகின்ற டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் பாக முடிக்கப்பட்டு விடும். இதற்கு அடுத்தபடியாக குறிப்பிட வேண்டுமென் றால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அருகாமையில் ரிங் ரோட் டில் ஸ்ரீ விஷ்வ ஜனனி என் னும் கட்டுமான திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் இரண்டு பிளாக்கு களில் ஒவ்வொன்றிலும் 44 வீடுகள் அமையப் பெற்று மொத்தம் 88 வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன. இந்த திட் டத்தில் ஒன்று, இரண்டு மற் றும் மூன்று படுக்கையறை கள் கொண்ட வீடுகள் இடம் பெறுகின்றன. நாங்கள் மேற் கொண்ட கட்டுமான பணி களிலேயே இந்த திட்டம் கூடுதல் திட்டமதிப்பீடு கொண்டதாகும். வரும் ஏப்ரல் அல்லது மே 2017ம் ஆண்டு இந்த திட்டம் முழுமை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

* கட்டுமான தொழிலுக்கு தாங்கள் முன் மொழியும் புதிய கருத்துக்கள் என்ன?

கட்டுமானத் தொழிலில் புதிது புதிதான யுக்திகளை கையாள வேண்டும். புதிய முறைக் கட்டுமானங்களை வெளிநாடுகளில் மேற்கொள் வதைப் போல் நாமும் செய்ய வேண்டும். முழுவது மாக அரசு வழங்கிடும்  மின் சாரத்தை மட்டுமே நம்பியி ருக்காமல் கிரீன் எனர்ஜி என்று சொல்லப்படுகின்ற சோலார் எனர்ஜியையும் பெருமளவில் கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது என்னு டைய பேரவா ஆகும். அப்பார்ட்மெண்டுகளில் வீடு கள் வாங்க முடிவு செய்யும் மக்கள் அந்த பகுதியில் இருக்கின்ற சுற்றுச்சூழல். விலை நிலவரங்கள் முதலிய வற்றை அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகும் என்பதையும் இந்த தருணத் தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். பொதுவான பொருளாதார முன்னேற்ற அடிப்படையில் சாதாரண மக்களும் வீடுகள் வாங்கும் வல்லமையை பெற வேண்டும் என்பதும் என்னுடைய அவா.  

 

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top