மதுரையில் ஜவுளிக்கென ஒரு சாம்ராஜ்யம்!

மதுரையில் ஜவுளிக்கென ஒரு சாம்ராஜ்யம்!

ஜவுளித்துறையில் காலடி எடுத்து வைத்து தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் தேனி ஆனந்தம் என்கிற பெயரில் மிகச்சிறப்பான முறையில் விற்பனை நிலையங்களை நடத்திவரும் திரு. கே.செல்வ ராஜன், திரு.கே.தர்மராஜன் மற்றும் திரு. எஸ்.ஜி. நடராஜன் ஆகிய பொறுப்பாளர்களை சந்தித்து பேசினோம்.

‘நவநாகரீக உலகத்தில் மற்ற எல்லாவற்றைப் போலவும் நல்ல ஆடை உடுத்துவது என்பது பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாக இருந்து வருகின்றது. முன்பெல்லாம் வெளியில் செல்லும்போது ஏதோ ஒரு ஆடை அணிந்திருந்தால் போதும் என்கிற நிலை இருந்து வந்தது, ஆனாலும் இது பல வருடங்களுக்கும் முந்தியதாகும். உடல் ஒப்பனைகளில் வாசனை திரவியங்கள், பவுடர்கள், மற்றும் இதர வஸ்துக்களை தேர்ந்து தெடுத்து மக்களால் வாங்கப்படுகின்றன. அதைப்போலவே இப்போது மக்கள் அணிகின்ற உடை அலங்காரம் பொருந்தியதாகவும், மற்றவர்களை கவர்வதாகவும் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றார்கள். ஆகவே தான் ஆடை உலகமானது மிகச்சிறந்த புதிய தயாரிப்புகளுடன் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. ஆடை விதங்களுக்கான தேவையும் ஒவ்வொரு நாளும் புதிய வடிவை அடைந்துக்கொண்டே இருக்கின்றது. காலத்திற்கு தகுந்தார் போல், மக்களை திருப்தி படுத்தும் வகையில் மிகவும் புதிய, அதே சமயம் மற்றவர் போற்றும் ரகங்களில் ஆடைகளை எங்களுடைய வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டுமென்பது தான் தற்போதைய நோக்கமாக இருக்கின்றது.

ஆடைத் துறையை தேர்ந்தெடுத்தது பற்றி..

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் பெரியவர்கள். ஒரு தனிமனிதனின் அடையாளமாகவும் அவனின் ஒரு அங்கமாகவும் திகழ்வதுதான் ஆடைகள். ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதை ‘சிந்து சமவெளி’ நாகரீக சின்னங்களில் காணப்படும் ஆடைகள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தனை பாரம்பரியம் பொருந்திய நெசவுத்தொழிலை செய்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தான் நாங்கள். ஆடைகளையும் அவற்றின் தரத்தையும் உணர்ந்திருந்த நாங்கள், பஜாரில் 1992-ம் ஆண்டு பத்துக்கு பதினொன்று என்கிற ஒரு சிறிய இடத்திலேயே ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் முன்நிறுத்தி தான் அன்றைய தேனி ஆனந்தத்தை துவங்கினோம்.

கடையாக துவங்கப்பட்ட ஒன்று, இன்று மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது, இதற்கான காரணம்..

எல்லா துறையிலும் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டுவதே குறிக்கோள். நாங்களும் அதில் விதிவிலக்கல்ல. எனினும் எங்களுடைய மாமா எங்களுக்கு கற்பித்ததின்படி, நேர்மையான முறையில் தரமான ஆடைகளை குறைந்த விலையில் அளித்ததே எங்களின் வளர்ச்சியின் காரணமாக கருதுவதுண்டு. இது மக்களின் ஆதரவை மட்டுமல்லாமல் அவர்களின் நன்மதிப்பினையும் எங்களுக்கு அளித்தது. நெசவு தொழில் செய்த குடும்பத்தை சார்ந்தவர்களாக நாங்கள் இருப்பினும் வர்த்தக ரீதியில் எங்களுக்கு தொழிலில் வளர கற்பித்து, ஒரு சிறு கடையிலிருந்து இன்று இரண்டு மாவட்டங்களில் ஒரு மிகப்பெரிய ஜவுளி நிறுவனமாக ஒரு தொழிலாளருடன் துவங்கி இன்று 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் உயரச் செய்ததிற்கான நன்றிக்கடன் எங்களின் மாமா திரு. எஸ்.ஜி. நடராஜன் அவர்களையே சாரும்.

‘குறைந்த விலையில் தரமான ஆடைகள்’ எப்படி சாத்தியம்?

இன்று எல்லா விஷய மும் சாத்தியமே! அனைத்தும் நாம் பார்க்கின்ற பார்வையில் தான் உள்ளது. ஜவுளி துறையிலேயே இருந்தமையால் ஆடையின் தரம் பற்றி நாங்கள் நன்கு அறி வோம். எனவே, நாங்கள் தரமான ஆடைகளை அதிகமாக கொள்முதல் செய்து அவற்றை குறைந்த விலையில் மக்களிடம் சேர்க்கிறோம்.

திண்டுக்கல், தேனி மக்களைப் பொருத்தவரை ஆடையின் தேர்வு எப்படியுள்ளது?

இரண்டு மாவட்டங்களிலும் காட்டன் சேலைகளில் தான் மக்களின் ஆர்வம் அதிகமுள்ளது. எனினும் இன்று மக்களின் ஆடைத்தேர்வில் மாற்றங்களை காண முடிகிறது. கடந்த பத்தாண்டு காலமாக ரெடிமேட் ஆடைகள்தான் ஆண்கள் பெண்கள் என இருபாலரின் விருப்பமான தேர்வாக அமைந்துள்ளது. முன்பெல்லாம் பெண்கள் திருமணத்திற்கு பின் சேலைகள் தான் கட்ட வேண்டுமென இருந்தனர். ஆனால் இன்று பெண்கள் திருமணத்திற்கு பின்பும் சுடிதார் போன்ற ஆடைகளையே விரும்புகிறார்கள்.

திண்டுக்கல், தேனிக்கு அடுத்தப்படியாக மதுரைக்குள் பிரவேசிக்கப் போவதாக ஒரு செய்தி..

அடுத்தடுத்த ஊர்களில் எங்களின் நிறுவனம் துவங்கப்பட்டு எங்களின் நிறுவனத்தை மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எங்களின் எண்ணம். அதனால் தேனி அதற்கு பின் திண்டுக்கல் தற்போது மதுரையை நோக்கியுள்ளோம். விரைவில் மதுரையில் எங்களின் புதிய கிளையை கோரிப்பாளையம் சந்திப்பில் அமைந்திருக்கும் கட்டிடத்தில் பிரம்மாண்டமாக 6 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக கார் பார்க்கிங் வசதியுடன் துவங்கவிருக்கிறோம்.

மதுரை மக்களை கவர உங்களின் யுக்தி!

மதுரையைப் பொருத்தவரை இங்கு எல்லா தரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். எனினும் அதில் அதிகமாக நடுத்தரம் மற்றும் உயர் நடுத்தரம் சார்ந்த மக்களே அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் தான் எங்களின் வாடிக்கையாளர்கள். மேலும், எங்களின் மிகப்பெரிய பலமாக நாங்கள் கருதுவது எங்களின் அதிகப்படியான கலெக்ஷன்ஸ் தான் அதுபோக தரமும் அத்துடன் இணைந்திருக்கிறது. அவை தான் மதுரை மக்களின் விருப்பமும் கூட. இன்று இளைஞர்கள் மத்தியில் பிராண்டட் மோகம் அதிகமுள்ளது, உங்களைப் பொருத்தவரை எந்தளவில் பிராண்டட் ஆடைகள் இடம்பெற்றிருக்கும்... தேனி மற்றும் திண்டுக்கலை பொருத்தவரை அங்கு 50% ப்ராண்டட் ஆடைகளை விற்பனை செய்கிறோம். மதுரையைப் பொருத்தவரை அதை 80 சதவீதமாக மாற்றவுள்ளோம். இதே துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதினால் இங்கு மக்களின் மனநிலையை எங்களால் கணித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்திட முடியும் என்று நம்புகிறோம்.

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top