எல்லோருக்கும் சொந்த வீடு! இனி ஈசியாக வாங்கலாம்!!

எல்லோருக்கும் சொந்த வீடு! இனி ஈசியாக வாங்கலாம்!!

வீடு வாங்க வேண்டுமென்பது ஒவ்வொருவரின் முக்கிய கனவுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறிப்பிட்ட இந்த இடத்தில் இந்த அப்பாட்மெண்டில் வீடு வாங்க வேண்டுமென்பதுதான் கனவு. அந்த கனவை நனவாக்குகிறது சிவா செல்ட்டர்ஸ்.

ஆம்! பொதுவாக வீடு கள் என்றாலே இன்று நகர்புறத்தை விட்டு வெளியில் தான் வாங்கமுடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றி மிகவும் சிறப்பான விலையில் தரமான அப்பார்ட்மெண்ட்களை உருவாக்கிவருகிறது சிவா செல்ட்டர்ஸ். மதுரை மக்கள் அப்பார்ட்மெண்ட் கலாசாரத்தை எந்தளவு விரும்புகிறார்கள், மதுரை மாநகரம் அப்பார்மெண்ட்களை வரவேற்கிறதா, இது மிடில் கிளாஸ் மக்களாலும் வாங்க முடியுமா? என்பதை பற்றி அறிய இவர்களின் இத்தகைய வளர்ச்சியை முன்நிறுத்தி, அதன் நிர்வாக இயக்குநர் திரு. மீனாட்சி சுந்தரம் அவர்களை சந்தித்து உரையாடினோம்.

‘மதுரையைப் பொருத்தவரை அப்பார்ட்மெண்ட் கலாசாரம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இது இன்றோ நேற்றோ அல்ல நாங்கள் தொடங்கிய, 1995லேயே பார்க்க முடிந்தது. என்னுடைய பி.காம் படிப்பினை நான் அமெரிக்கன் கல்லூரியில் முடிக்கும்வரை வேறு வியாபாரத்தையே செய்து வந்தோம். அப்போது மதுரையில் அதிகப்படியான அப்பார்ட்மெண்ட்கள் இல்லை, எனவே, புதிய நம்பிக்கையோடு, 1995ம் ஆண்டு நாங்கள் ரியல் எஸ்டேட் தொழிலைத் துவங்கினோம்.

அன்றைய காலக்கட்டத்தில் பில்டர்களும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். அத்தோடு மக்கள் அனைவருமே தனிவீடுகளிலே வாழ்ந்து வந்தனர், எனவே, மதுரையில் அப்பார்ட்மெண்ட் என்னும் ஒன்று மக்களின் மத்தியில் எந்தளவில் இருக்கும், இது ஏற்றுக்கொள்ளப்படுமா? என பல கேள்விகள் என்னுள் எழும்பின. இருப்பினும், ஒரு விதமான நம்பிக்கையோடு கே.கே. நகரில் லேக் வியூ அப்பார்ட்ண்ட் முதல் ப்ராஜெட்டாக 1997ல் கட்டி முடித்து, அதில் நல்ல வரவேற்பினைக் கண்டோம். அச்சமயத்தில் நாங்கள் ஒரு சதுர அடிக்கு 850 ரூபாய் என்கிற விலையில் அப்பார்ட்மெண்ட் வீடுகளை விற்பனை செய்தோம். மேலும், அச்சமயத்தில் மதுரைக்கு இது புதிதானப்படியால் மக்களிடத்திலிருந்து மிகவும் நல்ல வரவேற்பினையே பெற்றோம். அதனைத் சுமார் 20 ஆண்டு காலங்களில், இன்றுவரை சுமார் 13 ப்ராஜெட்களில் சுமார் 350 ப்ளாட்டுகள் உருவாக்கியுள்ளோம். இன்று மதுரையில் சுமார் 30க்கும் மேற்பட்ட அப்பார்ட்மெண்ட்கள் இருந்தப்போதிலும், மக்களால் சட்டென அப்பார்ட்மெண்ட்களுக்கு மாற முடியவில்லை.  முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் பசுமையாகவும், காற்றோட்டமாகவும் காணப்பட்ட தென்தமிழகப் பகுதி தற்போது பல ஆக்கிரமிப்புக்குள் உட்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் தங்களுக்கென தனிவீடுகள் வேண்டும், அதுவும் நகர்புறத்திலேயேதான் வேண்டுமென விரும்புகிறார்கள். இன்று நகர்புறங்களில் இடம் வாங்குவதோ, அல்லது வீடு வாங்குவதோ மிகவும் காஸ்ட்லியாக மாறிவிட்டது. இனிவரும் காலங்களிலும் அப்பார்ட்மெண்ட்களுக்கு தான் மக்கள் மாற வேண்டும். இன்று, இடம் வாங்க வேண்டுமென்றால், நிச்சயம் அது நகர் புறத்தை விட்டு வெளியில் தான் வாங்கும்படி உள்ளது. இது மக்களை நகர்புறத்தை விட்டு வெளியில் கொண்டுபோய்விடுகிறது. எங்களைப் பொருத்தவரையில் எங்களின் ப்ராஜெக்ட் அனைத்துமே நகர் புறங்களுக்குள் இருக்கும்படியே அமைத்து வருகிறோம்.

மேலும், இன்று மதுரையில் அதிகப்படியாக மிடில்கிளாஸ் மக்கள் தான் அதிகம். அவர்களால் அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்க முடியுமா? என்கிற கேள்வியை முன்வைத்தீர்கள். இன்று அப்பார்மெண்ட்கள் அதிகம் வாங்குவதே மிடில் கிளாஸ் மக்கள் தான். அவர்களுக்கு தான் வீடு வாங்க பல வங்கிகள் கடன் உதவி அளிக்கிறார்கள். அவர்கள் 15 ஆண்டுகளிலே அல்லது 20 ஆண்டுகளிலே அந்த கடனை கட்டி முடிக்கலாம். உதாரணத்திற்கு ஒரு குடும்பம் ஒரு அப்பார்ட்மெண்டை வாங்கி, அவர்கள் கட்டிய வாடகையை வங்கி கடனாக கட்டினால் அவர்களுக்கு பலனாக அவர்களுக்கென சொந்த வீடு கிடைத்து விடும்.

எங்களின் ப்ராஜெட்களிலேயே 24 இலட்சத்திலிருந்து வீடுகள் துவங்குகிறது. அதில் எங்களின் அப்பார்ட்மெண்ட்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பெருத்தப்பட்டு, காவலாளியுடன் கூடிய 24 மணிநேர பாதுகாப்பு வசதி, ஜிம், ஆர்.ஓ. தண்ணீர் வசதி, சோலார் பவர் என பல வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்.

தற்போது பாண்டிக்கோவில் ரிங் ரோட்டில் உள்ள குரு மருத்துவமனையின் அருகாமையில் விஷ்வ ஜனனி என்னும் ஒரு அப்பார்ட்மெண்ட்டும், பீ.பி.குளத்தில் துளசி என்னும் ஒரு அப்பார்ட்மெண்டும் தற்போது கட்டிக்கொண்டிருக்கிறோம்.’ என கூறினார்.

தொடர்புக்கு: 0452-4217959, 94422-57959

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top