புதுவகை மாடித்தோட்டம்! - அசத்தும் மதுரை ஆட்டோ டிரைவர்

புதுவகை மாடித்தோட்டம்! - அசத்தும் மதுரை ஆட்டோ டிரைவர்

 தமிழ்நாட்டில் மக்கும் குப்பை உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர், மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், மாமிசம் என நமக்கு மிக நெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான். மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி, உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள். இத்தோடு, மக்காத குப்பையில் தெர்மாகூலும் ஒன்று என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்? ‘பினைல் ஈத்தேன்’ எனப்படும் வேதிப்பொருள் கொண்டதுதான் இந்த தெர்மாகூல்.

எனவே, தெர்மாகூல் பெட்டியினால் வெப்பநிலைக் காக்கும் தன்மையுள்ளதால் இதில் மலர்களை ஐஸ் கட்டியோடு வைக்கும்போது வாடாமல் இருக்கும். ஆனால், துர்ரதிஸ்டவிதமாக இதனை மறுசுழற்சி செய்ய முடியாது. எரித்தல் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்புகையை இது வெளியேற்றும். இப்படி பயனில்லாமல் தெருக்களிலும், குப்பை மேடுகளிலும் சுகாதார கேடு விளைவித்துக் கொண்டிருக்கும் தெர்மாகூல் பெட்டிகளை சேகரித்து மாடித்தோட்டம் வைத்து அசத்திக் கொண்டிருக்கிறார் திரு.ராம் பிரசாத்.

அவரிடம் இதைக்குறித்து கேட்டபொழுது: ‘பிளாஸ்டிக்கும் தெர்மாகூலும் தான் இன்று, நம்முடைய சுகாதார கேட்டிற்கு முக்கியப் பங்கினை வகிக்கிறது. ஆனால், தற்போது பல தொழிற்நுட்பங்கள் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தெர்மாக்கூலை எதுவும் செய்ய முடியாது. ஒருசமயம், இரண்டு தெர்மாகூல் பெட்டிகளைக் கொண்டு பொண்ணாங்கன்னி, புதினா போன்றவற்றை வளர்த்துப் பார்த்தேன். இரண்டுமே நன்கு வளர்ந்தது. நான் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் சாலையில் செல்லும் போது சாலையின் ஓரங்களில் கிடக்கும் தெர்மாகூல்களை எடுத்துவந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து வருகிறோம்.

தற்போது அதில் கத்தரி, தக்காளி, வெண்டை, முள்ளங்கி, சீனி அவரை, சிறு கீரை, பாலகீரை போன்றவற்றை தனித்தனிப் பெட்டிகளில் வளர்க்கத் தொடங்கினேன். அதற்கு உரமாக காய்கறிக் கழிவுகள், முட்டை ஓடு என சமையறைக் கழிவுகளையும், மட்கிய சாணத்தையும், மண்புழு உரத்தையும் பயன்படுத்துகிறேன். இன்று, பெரும்பாலான மக்கள் தங்களின் வீட்டு மாடியிலேயே தோட்டத்தை அமைத்து வருகின்றனர். ஆனால், அதற்கான முதலீடு என்பது சற்று அதிகமாக இருக்கிறது. ஆனால், தெர்மாகூல் பெட்டிகளைப் பயன்படுத்துப்போது விதைகளுக்கான செலவு மட்டுமே. மேலும், இதன் எடையும் குறைவாக இருப்பதால் இதை எளிதில் இடமாற்றிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 9095975986

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top