சிவகங்கை மாவட்டத்தில் முதல் IATA பதிவு பெற்ற நிறுவனம்!

சிவகங்கை மாவட்டத்தில் முதல் IATA பதிவு பெற்ற நிறுவனம்!

காரைக்குடி நகரில் செக்காலையில் காலேஜ் ரோட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சபரி டிராவல்ஸ், கைராசியான டிராவல் நிறுவனம் என்ற பெயரைப் எல்லோரிடத்திலும் பெற்று சிறப்புடன் செயலாற்றி வருகின்றது.

சிவகங்கை மாவட்டத்தின் முதல் IATA அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டை கேள்விப்பட்ட நாம் அதன் தற்போதைய மேலாண்மை இயக்குனர் திரு.என்.கோவிந்தராஜ் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

சபரி டிராவல்ஸின் தோற்றம் பற்றி... 

எனது தந்தை  திரு.நாகப்பன் அவர்களால் சபரி டிராவல்ஸ் காரைக்குடி நகரத்தில் 1956-ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டுவிட்டது. கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த சேவையை சபரி டிராவல்ஸ் வழங்கி வருகின்றது. முக்கியமாக எங்களுடைய நிறுவனத்தின் மூலமாக விமான பயணத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதோடு, பயணத்திற்கு தேவையான விசாக்களையும் பெற்று தருகின்றோம். வெளிநாடுகளுக்கு உயர்கல்வி சம்பந்தமாக செல்லக்கூடிய மாணவர்களுக்கு மிகுந்த சிரத்தையுடன் எல்லாவிதமான பயண ஏற்பாடுகளையும் குறைவின்றி செய்து கொடுக்கின்றோம்.

உங்கள் டிராவல்ஸ் பற்றிய சிறப்பம்சங்கள்

சபரி டிராவல்ஸ் சுமார் அரைநூற்றாண்டு காலமாக காரைக்குடியில் இயங்கி வருவதால், இந்த நிறுவனத்தின் மூலமாக பல்வேறு வேலைகளின் நிமித்தம் வெளிநாடு செல்பவர்களுக்கு சில கூடுதல் சலுகைகளும் கிடைக்கப் பெறுகின்றன. பொதுவாக இணையதளத்தின் மூலமாக விமானப்பயணத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளும்போது, பிரயாணிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றது. சபரியின் மூலமாக பயண டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது கூடுதல் கட்டண சலுகையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

இது எப்படியென்றால் கடந்த சுமார் 50 ஆண்டு காலமாக பல்வேறு விமான நிறுவனங்களுடன் தொடர் வணிக செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதால் இந்த சலுகை விசேஷமாக எங்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.

நான் லண்டன், ஸ்காட்லாந்து, ஆஸ்திரிலேயா, நியூசிலாந்து போன்ற இடங்களில் வசித்து வந்துள்ளேன். இதனால் மாணவர்கள் இந்தியாவில் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்விக்காகவும், பயிற்சிகளுக்காகவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, எங்கள் நிறுவனத்தின் மூலமாக மிகச்சிறந்த வழிகாட்டுதலை அவர்களுக்கு எளிதில் வழங்க முடிகிறது.

சபரி டிராவல் வழங்கும் விசேஷ சலுகைகள்

மாணவர்களுக்கு விமான பயண ஏற்பாடு செய்து கொடுக்கும் போது, பதிவு கட்டணமோ சேவைக் கட்டணங்களோ அவர்களிடமிருந்து வசூல் செய்யப்படுவதில்லை. இந்த சலுகையானது மாணவர்களை உயர்கல்விக்கு ஊக்குவிப்பதாகவே அமைந்திருக்கின்றது. மிகச்சிறந்த வழிகாட்டுதல் மற்றும் பயணக் கட்டணத்தில் கூடுதல் சலுகைகள் முதலியவை கிடைக்கப் பெறுவதால், மாணவர்கள் சபரி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ஈர்ப்புடன் வந்து அன்பான சேவைகளைப் பெற்று செல்கின்றார்கள்.

இதர சேவைகள் பற்றி...

சபரி டிராவல்ஸ் மூலமாக வாடிக்கையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் தேவைப்படுகின்ற அனைத்து பயண ஏற்பாடுகளையும் அவர்கள் தேவை அறிந்து செய்து கொடுக்கிறோம்.

உங்கள் மூலமாக பலன் பெற்ற முக்கியஸ்தர்கள் பற்றி...

பிள்ளையார்பட்டி ஆலயத்தின் பூஜைகளுக்கான தலைமை நிர்வாகி திரு.பிச்சைக்குருக்கள், குன்றக்குடி அடிகளார் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுதர்சனன் நாச்சியப்பன் ஆகியோர் எங்களின் வாடிக்கையாளர்களாகவும் நலம் விரும்பிகளாகவும் இருக்கின்றார்கள். எங்களிடத்தில் யார் எந்த சேவையை நாடி வந்தாலும் மிகுந்த அக்கறையுடனும் கனிவுடனும் சேவையக்க வேண்டுமென்பதே எங்களின் நோக்கமாகவும் இருந்து வருகின்றது.

Tags: News, Art and Culture, Coaching

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top