அசத்திக் கொண்டிருக்கும் அடுக்கு மாடி வீடுகள்

அசத்திக் கொண்டிருக்கும் அடுக்கு மாடி வீடுகள்

அடுக்கு மாடி வீடுகளுக்கு குடிபெயரலாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறேன் என்று யாராவது சொன்னால்போதும், கருப்பு கொடியைத் தூக்கிக் கொண்டு, ‘அங்கெல்லாம் போய்ட்டா, பக்கத்து வீட்டுல இருக்கிறவங்க, எதித்த வீட்டில இருக்கிறவங்ககூட யாருனே தெரியாது, என்ன ஒரு அவசரமானாலும் ஒத்தாசைக்கு யாருமே வரமாட்டாங்களே’ என பீதியைக் கிளப்பி விடுவார்கள். ஆனால், அடுக்கு மாடிக்குடியிருப்பு வாழ்க்கை நிச்சயம் அப்படி இல்லை. ஏதோ ஒருசில இடங்களில் இப்படி இருப்பதால், அகில உலகில் உள்ள எல்லா அடுக்குமாடி குடியிருப்புகளும் இப்படித்தான் என நாம் தீர்மானித்து விடக்கூடாது.

இயந்திரத்துவமான வாழ்க்கையை நோக்கி செல்லும் மக்களுக்கு அடைக்கலம் அளிப்பது சென்னை, பெங்களுரூ போன்ற மாநகரங்கள்தான். இங்கு மக்கள் தன் வேலையை மட்டுமே முன்நிறுத்தி செயல்படுவதால் தன் குடும்பத்தாரிடம்கூட நேரம் செலவிட முடியாமல் இருக்கிறார்கள். அந்நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் மட்டுமல்ல, தனிவீடுகளில் இருந்தாலும் அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாது. ஆனால், மக்களின் மத்தியில் அடுக்குமாடி வீடுகளால் தான் இந்த நிலை ஏற்படுகிறது என்கிற தவறான புரிதல் ஆழமாக பதிந்துள்ளது.

சரி, இப்போது நம்முடைய ஊருக்கு வருவோம். முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் பசுமையாகவும், காற்றோட்டமாகவும் காணப்பட்ட தென்தமிழகப்பகுதி தற்போது பல ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் தங்களுக்கென தனிவீடுகள் வேண்டும், அதுவும் நகர்புறத்திலேயேதான் வேண்டுமென விரும்புகிறார்கள். இன்றைய மக்களின் லைப்-ஸ்டைல்படி வீட்டிற்கு ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, ஒரு சமையலறை, போர்டிக்கோ, இவைதான் பெரும்பாலானோரின் தேவையாக இருக்கும். இவற்றை கட்ட 800 முதல் 900 சதுர அடியாவது தேவையாக இருக்கும். இப்படி ஒரு குடும்பத்திற்கு 900 சதுர அடி தேவைப்பட்டால், எவ்வளவு இடம் தேவைப்படும் என்பதை நினைத்தாலே தலைசுற்றுகிறது. இப்படி தனித்தனி வீடுகளாய் கட்டுவதால் வீட்டிற்குள் சரியான காற்றோட்டம் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். இன்று நகருக்குள் தனிவீடு கட்டுவது என்கிற சூழலே இல்லாமல் போய்விட்டது. மேலும், நகருக்குள் வாடகைக்குகூட வீடுகள் கிடைப்பதில்லை.

ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பக்கம் நாம் திரும்பி பார்க்கும்போது தனி வீடுகளை விட ஏகப்பட்ட வசதிகளோடு தென்படுகிறது. இதில் உள்ள வசதிகளையும் அதனால் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் சேவையையும் அறிந்து இன்று பல மக்கள் அடுக்குமாடிப்பக்கம் திரும்ப பச்சைக் கொடி காட்டி வருகிறார்கள். எனினும், தென்தமிழகத்தைச் சார்ந்த மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் போன்ற நகரத்தின் மக்கள் சற்று தயங்குகிறார்கள். ஆனால், தனிவீடுகளை விட அடுக்குமாடி வீடுகள் தான் சிறந்ததாக காணமுடிகிறது.

‘அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு பெரிதளவிளான இடம் தேவைப்படாது. இங்கு ஒரு தனிவீடு கட்டும் இடத்தில் குறைந்தது 4 மாடி எழுப்பி அதில் நான்கு குடும்பம் வசிக்கலாம். இதனால் இடத்தின் தேவையும் குறைந்து எல்லோருக்கும் காற்றோட்டமான இல்லம் கிடைக்கும்.’ என்கிறார் மேக்ஸ் ப்ராபர்டிஸின் நிர்வாக இயக்குநர் திரு. இளங்கோ பாக்யராஜ் அவர்கள். மேலும், அவர்: ‘2008ம் ஆண்டு நானும், மேக்ஸ் ப்ராப்பர்டிஸின் இயக்குநராக இருக்கும் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணா அவர்களும் இணைந்துதான் துவங்கினோம். நாங்கள் துவங்கியபோதே மக்கள் அடுக்குமாடியில் வசிக்க விருப்பம் தெரிவிக்க தொடங்கிவிட்டனர். தற்போது 8 ஆண்டுகளே ஆன நிலையில் எஸ்.எஸ்.காலனியில் மேக்ஸ் ரெசிடென்சியும், பின் விளாங்குடியில் 108 வீடுகள் கொண்ட மேக்ஸ் டவரையும், அதனைத் தொடர்ந்து எஸ். எஸ். காலனியிலேயே மேக்ஸ் ஸ்டார், மேக்ஸ் டவர், மேக்ஸ் சாரதி, மேக்ஸ் கோல்டு, மேக்ஸ் விஸ்டா, மேக்ஸ் விஜய், மேக்ஸ் சஹானா, மேக்ஸ் ஜிவி, மேக்ஸ் ஸ்ப்ரிங் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளோம். இதன் மூலமாகவே, மக்களின் விருப்பமானது அடுக்குமாடி குடியிருப்புகளின் பக்கம் திரும்பியுள்ளதை நம்மால் மிகத்தெளிவாக காணமுடிகிறது. மேலும், இன்றைய காலகட்டத்தைப் பொருத்தளவில் ரியல் எஸ்டேட் எங்கோ போய் கொண்டிருக்கிறது.

இதனால் இன்று, நகருக்குள் தனிவீடு கட்டி குடியேருவது என்பது நடுத்தர மக்களுக்கும், மேல்தட்டு நடுத்தர மக்களுக்குமே சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. இதனாலேயே மக்கள் இன்று வீடுகள் கட்ட நகருக்கு வெளிப் புறங்களுக்கு பயணிக்கிறார்கள். ஆகையால், பச்சைப் பசேலென இருந்த விளைநிலைகள் இன்று மனைநிலங்களாக மாறி வருகிறது. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால், பெரிதளவிலான இடங்கள் தேவைப்படாது. மேலும், இன்று பெரும்பாலனோர் வீட்டில் பெரியவர்களை தனிமையில்தான் விட்டு செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு என்ன உத்திரவாதம் உள்ளது? ஆனால், அடுக்குமாடி வீடுகளாக இருப்பின் நிச்சயம் அவர்களுக்கு பேச்சுத் துணைக்கும் சரி, எந்த ஒரு அவசரத்திற்கும் சரி, நிச்சயம் யாராவது இருப்பார்கள்.

இன்று, டெக்னாலஜியும் அதிகம் வளர்ந்துவிட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விடுமுறை நேரங்கள் கிரிக்கெட் மட்டைகளை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் செல்லும் சிறுவர்களை காணமுடியும். தற்போது செல்போன், ஐபாடு வரவுக்கு பின் அவையெல்லாம் மறைந்துவிட்டது. மேலும், தனிவீடுகளைப் பொருத்தவரை அருகில் விளையாட நண்பர்கள் இருப்பார்கள் என நாம் உறுதிப்பட சொல்லமுடியாது. ஆனால், அடுக்குமாடி வீடு என வரும்பொழுது நிச்சயம் அங்கு குழந்தைகள் இருப்பார்கள். அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே பாதுகாப்புடன் ப்ளே க்ரவுண்ட் இருக்கும். அத்தோடு அடுக்குமாடி குடியிருப்புகளில் அந்நியர்கள் யார் வந்தாலும், பாதுகாவலர்களிடம் தங்களின் அடையாளத்தை தெரிவிக்காமல் செல்ல முடியாது.’ என கூறினார்.

பல அடுக்குமாடி வீடுகளில் வசிப்போரின் கருத்துக்கள்:
1. அடுக்குமாடி வீடுகளில் ப்ளே க்ரவுண்ட் இருப்பது விளையாடுவதற்கு, சைக்கிளிங் செய்வதற்கும் எளிதாக உள்ளது. மேலும், என் குழந்தை வெளியில் சென்று விபத்து எதும் ஏற்பட்டு விடுமோ என்ற அபாயம் அறவே இல்லை.
2. எத்தனையோ சொந்த பந்தங்கள் இருந்தாலும் நட்புறவு வட்டம் தான் மேலோங்கி இருக்கிறது. இங்கும் ஜாதி மத வேறுபாடின்றி எங்களால் புது நண்பர்களோடு எந்தவொரு பிரச்சனையானாலும் அதை பகிர்ந்துகொள்ள முடிகிறது.
3. இந்த காலத்தில் வீடு மற்றும் எங்களின் பாதுகாப்பு தனிவீடுகளில் மிகமிகக் குறைவு. மேக்ஸ் போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாவலர்களால் எங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது. குறைந்தது 1 வருடம் வீட்டை பூட்டி விட்டு சென்றாலும் எந்தவிதமான பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.
4. அடுக்குமாடி வீடுகளில் இரண்டாவது மாடிக்கு மேல் கொசுத்தொல்லை இருப்பதில்லை. ஏனென்றால், இயற்கையாகவே கொசு 20 அடிக்கு மேல் பறப்பது கடினம்.
5. அடுக்குமாடி வீடுகளில் அசோசியேசன் மூலமாக விழாக்காலங்களில் அனைவரையும் வைத்து குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான கோலப்போட்டி, சமையல் போட்டி போன்றவை நடைபெறுவதோடு அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருவரோடு ஒருவர் பேசிப்பழகி ஒரு பெரும் திருவிழாக்களில் கலந்துகொண்ட மனமகிழ்ச்சியை அளிக்கிறது.
6. கூட்டுக்குடும்பங்கள் குறைந்துகொண்டே வரும் இக்காலக்கட்டத்தில் தனிக்குடித்தனம் சென்று தங்களையும் தங்கள் கலாச்சாரத்தையும் தொலைத்து விடாமல் குறைந்தபட்சம் கூட்டுக்குடும்ப அனுபவத்தோடு வாழ வழிசெய்கிறது அடுக்குமாடி குடியிருப்புகள்.

தொடர்புக்கு:
99655 69986, 99655 69985

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top