குழந்தையின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில்!

குழந்தையின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில்!

அக்காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் குறைந்தபட்சம் மூன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தன. அப்போது அவர்களின் எண்ணங்கள், செயல்கள், விருப்பங்கள் அனைத்தும் வேறுபட்டு காணப்படும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆசைகளை கண்டறிந்து அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை திறம்பட சிறந்து விளங்கச்செய்வர்.

ஆனால் இக்காலத்தில் ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளனர். எனவே பெற்றோர்கள் தங்களின் ஆசைகளை குழந்தைகளின் மீது திணிக்கின்றனர். இவ்வாறு தங்களின் நிறைவேறாத ஆசைகளை குழந்தையின் மீது திணிப்பதால் அவர்களின் தனித்துவம், பாதிக்கப்படுகிறது. (Individuality) எனவே குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத துறைகளில் சிறந்து விளங்குவதில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளை அடித்தோ வற்புறுத்தியோ ஒரு விஷயத்தை புரியவைப்பது தவறு அவ்வாறு நடந்துகொள்வது குழந்தையின் மனதில் வடுவாக பதிந்துவிடுகிறது. அதே விசயத்தை அன்பாகவும், செல்லமாகவும் எடுத்துகூறி புரியவைப்பதன் மூலம் மனதில் அந்த செயல் பசுமரத்தாணிபோல் ஆழமாக பதிந்து விடும்.

"Jack of all arts" & "My child knows something about everything"

மேற்கூறிய ஆங்கில வாக்கியத்தில் சொல்வதுபோல் தன் குழந்தை எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். மற்றும் என் குழந்தை அனைத்து துறைகளிலும் சிறிதளவு தெரிந்திருந்தால் போதும், என்று நினைப்பது மிகவும் தவறு.

குழந்தைகளுக்கு ஓவியம், பேச்சு, விளையாட்டு, நடனம் போன்ற அனைத்து விஷயங்களையும் கற்றுத்தந்து அவற்றில் அவர்கள் எதில் சிறந்து விளங்குகிறார்கள் என கண்டறிந்து குழந்தைகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் அவர்களுக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்காலமும் அவர்களின் விருப்பப்படியே சிறந்து காணப்படும்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top