இயற்கையோடு இயைந்து வாழ்வது எப்படி?

இயற்கையோடு இயைந்து வாழ்வது எப்படி?

மாற்றம் ஒன்று தான் மாறாதது. இயற்கை எப்போதும் நமக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கி கொண்டிருக்கும். சுமார் 40 வருட காலத்திற்கு முன்பு நாம் தமிழர்களின் அடையாளத்தை மறந்து மேற்கத்திய கலாச்சார உணவு பழக்க வழக்கத்திற்கு மாறி விட முயற்சி செய்தோம். அந்த மாற்றத்தின் முடிவில் நாம் திரும்ப நமது கலாச்சார, உணவு பழக்க வழக்கத்தை நோக்கி நகர வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது., தற்சமயம் இயற்கை உணவு, ஜல்லிக்கட்டு என நாம் மாறி வருகின்றோம். நாட்டின் முதுகெலும்பு விவசாயத்தையும் விவசாயிகளையும் நாம் நினைவு கூறத் தொடங்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்டுள்ள எஸ்.கே.பி டி நிறுவனம் இயற்கையோடு கூடிய பண்ணை வீடு திட்டத்தை மானாமதுரையில் உள்ள "வேதிக் வில்லேஜ்" ல் துவக்கி உள்ளது.

இன்றைய நவநாகரீக காலகட்டத்தில் இயற்கையோடு இயைந்து வாழும் ஒரு அற்புதமான திட்டத்தைத் தான் 'ஸ்ரீ கனகவேல் ப்ராபர்ட்டி டெவலப்பர்ஸ்' கையில் எடுத்துள்ளனர். பெரும்பாலும் பண்ணை வீடு என்னும் திட்டம் அதிகளவில் மக்களிடையில் அறியப்பட்டிருந்தாலும், இது சற்று மாறுப்பட்ட ஒரு திட்டமாக அமைந்திருக்கிறது. மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கையில் தனிவீடுகளை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

அந்தவகையில் தற்போது 'விவசாயம் காப்போம்' என பண்ணை நிலங்களை ஏற்படுத்தவுள்ளது இந்த நிறுவனம். அவர்களின் இத்திட்டத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள எஸ்கேபிடி-யின் இயக்குநர் திரு. சிவ. நாகேஸ்வரன் அவர்களிடம் கேட்டபொழுது:

எங்களுடைய நிறுவனத்தில் நடுத்தர குடும்பங்களை முன்னிலைப்படுத்தி தனிவீடுகளையே கடந்த பதினெந்து ஆண்டுகள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். நாங்கள் ரியல் எஸ்டேட் துவங்கிய போது இருந்த நிலை இன்று இல்லை. பெரும்பாலான விளைநிலங்களும், பல ஆண்டுகள் நிழலளித்த மரங்களும் அழிக்கப்பட்டுதான் மனைகள் கட்டப்படுகின்றன. அத்தோடு நம்முடைய நிலத்தை நாசமாக்கும் கருவேலமரங்களும் அதிகளவில் இருக்கின்றன. அவற்றை அகற்றி அவ்விடத்தில் முழுவதும் வீடுகள் கட்ட எங்களுக்கு விருப்பமில்லை. எனவே தான் மானாமதுரையில் 'வேதிக் வில்லேஜ்' என்னும் உயிர்த்துடிப்புள்ள ப்ராஜெக்டை துவங்கியுள்ளோம்.

சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 25 செண்டிற்கு ஒரு இடத்தில் தென்னை, மா, பலா, வாழை, நெல்லி, தேக்கு, கொய்யா, பப்பாளி, மாதுளை, வேம்பு, முருங்கை மரம், கருவேப்பிலை, துளசி, செம்பருத்தி, ரோஜா, கத்திரி, வெண்டை என 25 மரங்களையும், சுற்றுச்சுவருடன் கூட 350 சதுர.அடியில் போர் மற்றும் மின்சார வசதியுடன் ஒரு சிறிய வீடு, அதைச் சுற்றி சுற்றுச்சுவர், கேட்டும் குடும்பத்திற்கு சேர்த்து ரூ.15,00,000/- (ரூபாய் பதினைந்து லட்சம் மட்டும்) ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இன்றைய தலைமுறைகளுக்கு விவசாயம் குறித்து அவர்களின் சிறுவயதிலிருந்தே கற்பித்தால்தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எனவே, வீட்டின் கேட்டிலிருந்து வீடு வரையுள்ள முகப்பில் நெல் பயிர் சிறப்பாக பயிரிடுகிறோம். இதனால் தேவையான நெல்களை நமக்கு நாமே சாகுபடி நமது பண்ணைகளில் செய்துகொள்ளலாம். அனைவருக்கும் இதை எப்படி நாம் செய்வது என்கிற ஒரு கேள்வி எழும்பலாம். இங்கு நிறுவன கண்காணிப்பில் வேதிக் வில்லேஜ் அருகில் உள்ள விவசாயிகளைக் கொண்டே கவனித்துக்கொள்கிறோம்.

தற்போது முதற்கட்டமாக 100 ஏக்கர் இடத்தில் 30, 40 அடி சாலைகள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான இடங்களை ஏற்படுத்தி நூலகம், பஞ்சாயத்து அலுவலகம், ஒரு அழகிய குளம். அதன்மூலம் பல பறவைகளை எங்களின் இடத்தை நோக்கி வரவழைக்கவுள்ளோம்.

மக்களுக்கு அமைதியளிக்கும் வகையிலும், தங்களின் விடுமுறை நேரங்களில் இளைப்பாறும் விதமாகவும் மானாமதுரையிலேயே பசுமையான மரங்கள் சூழ நீச்சல் குளம், தங்கும் அறைகள் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்ட “எக்ஸிக்யூட்டிவ் கிளப்” ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளோம். இதில் உறுப்பினராவதற்கு ஆண்டு சந்தாவாக ரூ.1000 மட்டும் வசூலிக்கப்படுகிறது.

அத்தோடு எதிர்காலத்தில் இங்கு ஒரு திருமண மண்டபம், ஒரு திரையரங்கம், சைவ மற்றும் அசைவ உணவகம் போன்றவற்றையும் ஏற்படுத்தவிருக்கிறோம். திருமணங்கள் இல்லாத நாட்களில் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிளை நடத்துவோம்.

மழைக்காக மட்டுமே மரம் வளர்க்க வேண்டுமென்பதை மாற்றி, நேர்த்தியான மரங்களை ஏற்படுத்தி அவை பறவைகள் வந்த இளைப்பாறும் ஒரு நல்ல இடமாகவும் அமைந்திட வேண்டும். இதற்காக தற்போது 10000 மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்.' என கூறினார்.

இனிவரும் காலங்களில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே எந்த ஒரு நோயுமின்றி நீண்ட நெடு நாட்கள் எல்லா வளத்தோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். மீண்டும் வேத காலத்தை நோக்கி பயணிக்க வேதிக் வில்லேஜ் இன்முகத்தோடு அழைக்கிறது.

தொடர்புக்கு: 9842966551

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top