மடோன்னாவின் கிராமப் பெண்களுக்கான கல்விச் சேவை

மடோன்னாவின் கிராமப் பெண்களுக்கான கல்விச் சேவை

அத்தியாவசிய தேவைகள் என்பது பல இருப்பினும் நம்முடைய வாழ்க்கை தரம் நல்ல முறையில் அமைந்திட கல்வி கற்பது என்பது மிக முக்கிய அத்தியாவசியமாக உள்ளது. இதனை முன் நிறுத்திதான் இந்தியா சுதந்திரம் அடையும் கிறிஸ்தவ மிஷனரிகளால் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டன. சுமார் நூறு ஆண்டுகள் கடந்த போதிலும் அவை இன்றும் அதே கம்பீரத்தோடு தரமான கல்வியை அளித்து வருகிறது. எனினும் பெண்களுக்கான கல்வி என்பது மிக முக்கியமானதாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் தான் இமாங்குலேட் கன்செப்ஷன் என்னும் சபையைச் சார்ந்த கிறித்துவ சகோதரிகள் நிர்மலா பெண்கள் பள்ளியைத் துவங்கி தரமான கல்வியை சேவையாக பெண்களுக்கு அளித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியை தொடங்கி தற்போது கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரின் அருகில் மடோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்கியுள்ளனர்.

இக்கல்லூரியைப் பற்றி மேலும் அறிய கல்லூரியின் தாளாளர் அருட்சகோதரி ஆனந்தி அவர்கள்:

'இன்று பெண்களின் முன்னோற்றத்திற்கு நகர்புறங்களில் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தாலும், கிராமப்புறங்களில் பெண்களின் முன்னேற்றம் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இன்றும் கிராமப்புறங்களில் பெண்களின் கல்விக்கும் அவர்களின் வாழ்க்கை தரத்திற்கும் முக்கியத்துவம் குறைந்தளவில் இருக்கிறது மேலும், விரகனூரில் இருந்து மானாமதுரை வரை பெண்களுக்கான பிரத்யேக கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லை. கல்வி கற்க விரும்புவோர் நிச்சயம் மதுரைக்குதான் வரவேண்டும். ஒரு சில பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அனுப்பினாலும் ஒரு சிலர் இவ்வளவு தூரம் அனுப்பவேண்டுமா என சிந்திக்கிறார்கள். இதனையே முன்னிலைப்படுத்தியே உயர்கல்வி அளிக்கலாம் என எங்களின் குழு முடிவு செய்து, கடந்த 2014-ம் ஆண்டு திட்டமிடுதலைத் துவங்கி, 2016-ம் ஆண்டு அரசாங்கத்திலிருந்தும், மதுரை காமராஜர் பல்கலைகழகத்திலிருந்தும் அங்கீகாரம் பெற்று எங்களின் கல்லூரியைத் துவங்கியுள்ளோம்.

அதில் BA English, Tamil, History, B.Sc Maths, Computer Science, Physics B.Com CA, BBA. இத்தோடு மாலை வகுப்புகளாக Diploma in Desktop Publishing, Diploma in Tally தொடங்கியுள்ளோம். இன்று எங்கு வேலைக்கு சென்றாலும் ஆங்கிலம் என்பது அத்தியாவசியமாகி விட்டது. கிராமப்புறங்களில் உள்ள மாணவிகளுக்கு ஆங்கிலம் என்பது ஒரு பயமாகவே இருக்கிறது. இதனை மாறியமைக்கவே பிரத்யேகமான ஆங்கில வகுப்புகளையும், மாலை நேரங்களில் சிறப்பு ஆங்கில வகுப்புகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.

இளங்கலை பட்டம் என்பது இன்று முதுகலை படிப்பதற்கு ஒரு தகுதியாக மட்டுமே இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு இதனால் கல்வி மட்டுமே அளிக்காமல் அவர்கள் வாழ்க்கையில் தங்களுக்கென சுயமான ஒரு தொழில் துவங்கி வாழ்வில் ஒரு அந்தஸ்துடனும் பெண் சுதந்திரத்தோடு வாழவேண்டுமென்பதற்காக அவர்களுக்கு சில சுயதொழில்களையும் கற்பிக்கிறோம்.

பெரும்பாலும் எங்களின் கல்லூரியில் சேர வருபவர்கள் கிராமப்புறங்களை சார்ந்திருப்பதால் அவர்களுக்கு கல்விக்கட்டணம் என்பது ஒரு சுமையாக இருக்கும். எனவே, ஏழை எளியோருக்கு அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் நிதியை கிடைக்க உதவுகிறோம்.

எங்களுடைய அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 'எளியோர் வாழ்வு மலர' என்னும் நிதியே சேர்க்கப்படும். அதனைக் கொண்டுதான் கஷ்டப்படும் ஏழைப் பள்ளிகளின் படிப்பிற்கு உதவிகள் செய்யப்படுகிறது. அதேப்போல் வரவிருக்கும் நாட்களில் கல்லூரி மாணவிகளுக்கு உதவவுள்ளோம். தற்போதே எங்களின் கல்லூரிக்கு வேலைவாய்ப்பு அளிக்க சில நிறுவனங்கள் வரத்தொடங்கியுள்ளனர். இன்னும் வரவிருக்கும் ஆண்டுகளில் நிச்சயம் கிராமப்புற மாணவிகளுக்கு எங்களால் தரமான கல்வியோடு கூட வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். இன்னும் வரவிருக்கும் நாட்களில் மாலை நேர பயிற்சி வகுப்புகளைக் கொண்டு கஷ்டப்படும் மாணவிகள் தாங்களாகவே ஒரு சுயத்தொழில் தொடங்க வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கிறோம்.' என கூறினார்.

தொடர்புக்கு: 0452 - 2465493

 

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top