அறத்தில் சிறந்தது அன்னதானமே!

அறத்தில் சிறந்தது அன்னதானமே!

உலகத்திலுள்ள மக்கள் வீடுபேறடைவதற்குச் சாதனமாக இருந்து உதவு வது அறம் ஒன்றேயாம். நாம் சம்பாதித்த பொருள் இந்த சென்மத்தில் மட்டும் உதவி செய்யும். நாம் செய்யும் அறமோ மறுமைக்கும் வந்து உதவி செய்யும். எத்தேசத்தில், எக்குலத் தில், எந்தப் பிறப்பில் பிறந் தாலும் நாம் இப்பொழுது இங்கு செய்யும் அறம் பின் தொடர்ந்து வரும். அதனாலன்றோ ஔவைப் பிராட்டி யார் நமக்கு உபதேசிக்க வந்த போது முதலில் “அறஞ் செய விரும்பு' என்று வற் புறுத்தியுள்ளார்.

அந்த அற மாவது பலதிறப்பட்டுள்ளது. அவற்றில் தானம், தருமம் என்ற இருவகை சிறந்து விள ங்குகின்றன. இந்த இருவகை யில் முதலாவதாக நின்ற தானத்தில் பூதானம், கோதா னம், வஸ்திரதானம், கன் னிகா தானம், சுவர்ணதானம் எனப்பலப்பல கிளைகளுண்டு. இவற்றுள் தலை சிறந்து விளங்குவது அன்ன தானம் ஒன்றேயாகும். இத னை எல்லாச் சமயத்தவரும். எத்திறப்பட்டோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதற்குச் சமமானது முன்னுமில்லை, பின்னுமில்லை. எதனால் அன்னதானம் உயர்ந்தது என்பதைச் சிறிது ஆராய்வோம்.

உயிர்கள் அன்னத்தைத் தான் முக்கிய ஆதாரமாகக் கொண்டு வாழ்கின்றன. பசித்தோருக்கு அன்னத்தைக் கொடுத்தால் உயிரைக் கொடுத்தது போலாகும். குஷ்டம், சூலை முதலியவை களில் எத்துணைக் கொடிய நோய் ஒருவனுக்கு வந்து வருத்தினாலும், சில காலமா வது உயிர் வாழலாம். பசி என்னும் கொடிய நோய் ஒரு வனுக்கு வந்து சேர்ந்தால் சிறிது நேரமாவது உயிர் வாழ முடியுமா? பசி நோய் வந்த காலத்து எவ்வளவு சிரமம் உண்டாகிறது? கண் பஞ்சடைகிறது, காதடைக்கிறது. தலை சுற்றுகிறது. வயிறு ஒட்டிப்போகிறது. கால்கள் தடுமாறுகின்றன. அகக்கருவிகளாகிய மனஞ் சோர்வையடைகின்றன. புத்தி தடுமாறுகிறது. உயிர் துடிக்கிறது. கருவி கரணங்களெல்லாம் தத்தஞ் செயல்களினின்று தவிக்கின்றனவல்லவா? அத்தகைய கொடிய பசியை ஆற்றுவதைக் காட்டிலும் சிறந்த தருமம் மூன்று உலகத்திலும் கிடையாதென் பது உறுதி. பசியென்னும் நோயை அன்னம் என்கிற மருந்தைக் கொடுத்து நீக்க வேண்டும். பசியால் களைத்து வந்தவனுக்குச் சிறிது அன் னங்கொடுக்க அதை அருந்தியவுடனே அவன் முகம் எவ்வளவு பொலிவடைகிறது. மனம் எவ்வளவு ஆனந்தத்தையடைகிறது? ஆன்மா எவ்வளவு சாந்தியடைகிறது. சிந்தியுங்கள். அப்போது அன்னம் கொடுத்தவனுக்கு எவ்வளவு புண்ணியம் உண்டாகிறது? பசியாற்றுவதைக் காட்டிலும் சிறந்த தவம் வேறு ஒன்றும் இல்லை.
இப்போது நாம் தேடிய பொருளை சேமித்து வைக்க வேண்டிய இடம் யாது? எங்கு வைத்தால் ஒன்றுக்கு ஆயிரமாக வரும்? என்று ஆராய்ந்து பார்த்தால் அடி யார்கள், ஏழைகள் வயிறு தான் நல்ல சேமநிதி நிலை யம் (பண்டாபீஸ்). அதற்கு தலைவர் தருமதேவதையே யாம். அது எப்பொழுதும் கெடாது. ஆனால் ஏழைகள் வயிற்றில் பணமாகப் போட முடியுமா? முடியாது. பின் னர் என்ன செய்ய வேண் டும்? அன்னமாக மாற்றிப் போடவேண்டும். அப்படிப் போட்டு வைத்தால் அது பிறவிகள் தோறும் தொடர் ந்து கொண்டே வரும்.  ஆன்மதிருப்தியையுண்டு பண்ணுவதும், அளப்பரிய புண்ணியத்தை அளிப்பதும் அன்னதானம் ஒன்றேயா கும் என்கின்றார் சிதம்பரம் திருச் சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளையின் தலைவர் பிரம்மஸ்ரீ சி. நவதாண்டவ தீட்சிதர்.

29.11.2016-ல் கார்த் திகை 14-ல் செவ்வாய்க்கி ழமை அமாவாசை, 13.12.2016-ல் செவ்வாய்க் கிழமை கார்த்திகை 28-ல் சர்வாலய தீபம், பௌர்ணமி திருவண்ணாமலை தீபம், கார்த்திகை 1-ம் தேதி முதல் தை மாதம் மகர சங்கராந்தி வரை சபரி மலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் அனை வருக்கும் திருச்சிற்றம்பலம் அன்னதான அறக்கட்டளை யின் மூலமாக ஒவ்வொரு நாளும் 1000-க்கும் மேற் பட்ட பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுவதாக வும், இந்த புண்ணிய காரியத் தில் பக்திமான்கள், தர்ம வான்கள் பங்கு கொண்டு இதன் சிறந்த பலன்களை அடைய வேண்டுமென அறக்கட்டளையின் தலைவர் பிரம்மஸ்ரீ சி. நவதாண்டவ தீட்சிதர் அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

இந்த நல்ல காரியத்திற்கு நன்கொடைகள் வழங்க விரும்புவோர் திருச்சிற்றம் பலம் அன்னதான அறக்கட் டளை என்ற பெயரில் மணி யார்டர், வங்கி வரை வோலை, வங்கி காசோலை ஆகியவற்றின் மூலமாக அனுப்பி வைத்து 80-Gயின் கீழ் வருமானவரி விலக்கை யும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு: 9345512976, 7639043846

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top