ருசிக்க... புசிக்க... Eagle in Madurai

ருசிக்க... புசிக்க... Eagle in Madurai

அசத்தலான அறுசுவை உணவு, அட்டகாசமான வகைகள் என காதுகுத்து முதல் கல்யாணம் வரை நாம் முக்கியத்துவம் அளிப்பது உணவுகளில் தான். எவ்வளவு செலவு செய்து வைபவம் நடத்தினாலும், மக்களால் பேசப்படுவது பரிமாரப்பட்ட உணவுவகைகள் தான். அதற்கு தேவை தரமான கேட்டரிங் நிறுவனம், அவர்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் தான். இதில் ஒன்று குறைவுப்பட்டாலும் மற்றவையும் பாதிப்படையும். ஆனால், இவ்விரண்டும் ஒரு சேரக் கிடைத்தால் அதின் பலன் அமோகம்.

அப்படி தான் தற்போது மதுரையில் மக்களால் அதிகம் அறியப்பட்ட ஒரு பிரபலமான மசாலா மற்றும் ஊறுகாய் நிறுவனம் கேட்டரிங் தன் தடத்தைப் பதித்துக் கொண்டிருக்கிறது. பெரியார் பேருந்து நிலையத்தின் வழியாக நேதாஜி ரோடு செல்பவர்கள் நிச்சயம் ஒரு பறக்கும் கழுகின் சிலையை சாலையின் மத்தியில் கண்டிருப்பதுண்டு. அவர்கள் தான் 40 ஆண்டு காலமாக மசாலா மற்றும் ஊறுகாய்களை ஏற்றுமதி செய்யும் ஈகிள் நிறுவனம். தங்களின் இத்தனை ஆண்டு அனுபவங்களையும் ஒன்றுதிரட்டி இன்று கேட்டரிங் துறையில் அடியெடுத்து வைத்து சிறப்பான சேவையளித்து வரும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சதீஸ்குமார் அவர்களை சந்தித்தோம்.

'சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய தந்தை மசாலா மற்றும் ஊறுகாய் தயாரிப்பு நிறுவனமாக இந்த ஈகிள் நிறுவனத்தை துவங்கினார். அன்றைய காலத்தில் மதுரையில் ஒரு பிராண்டட் நிறுவனமாக நாங்கள் திகழ்ந்திருந்த போதிலும், எங்களின் வியாபாரமானது ஏற்றுமதி சார்ந்தே இருந்தது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளுர் கேட்டரிங் தேவைக்களுக்கும் மசாலா மற்றும் ஊறுகாய் சப்ளே செய்து வருவதினாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு சமையலின் மீது ஆர்வம் இருந்து வந்த காரணத்தினாலும் ஈகிள் நிறுவனத்தில் மற்றொரு புதுமையாக ஈவண்ட்ஸ் ரூ கேட்டரிங் சேவையைத் துவங்கினோம். அதில் 50 முதல் 5000 பேர் வரை Indoor மற்றும் Outdoor கேட்டரிங் செய்துவருகிறோம்.

எனினும் எந்த ஒரு தொழிலிலும் புதுமையிருந்தால் மட்டுமே மக்களின் நன்மதிப்பினைப் பெறமுடியும். எனவே, முதலில் கேட்டரிங் சேவையை Regular, Premium என இரண்டாக பிரித்து South Indian, North Indian, Chinese, Traditional என வகைப்படுத்தி அந்தந்த உணவுகளை அந்த உணவு சார்ந்திருப்பவர்களின் குழுவினைக் கொண்டே முழுக்க முழுக்க தயார் செய்கிறோம். உணவு என்பது அதின் ருசியைப் பொருத்தது எனவே, அந்தந்த உணவுக்கு அதன் உண்மைதன்மை இருப்பது மிகவும் முக்கியமானது. அதில் சிறப்பாக ஹாhட்டின் இட்லி அத்தோடு பூண்டு குழும்பு, பட்டர் நான், பன்னீர் டிக்கா, பன்னீர் மஞ்சூரியன், இளநீர் பாயாசம், குல்ச்சா என இன்னும் அதிகமான வகைகளைப் பிரத்யேகமான முறையில் தயார் செய்கிறோம்.

உணவுக்கு அடுத்தப்படியாக நாங்கள் அளிக்கும் முக்கியத்துவம் உணவு பரிமாறுவது. சரியான பரிமாறுதல் இருக்கும் போதுதான் மக்களால் திருப்தியான உணவுகளை உண்டு மனநிறைவுடன் செல்லமுடியும். எனவே, எல்லோருக்குமே நுணியிலையில் சீருடையணிந்த பணியாளர்களைக் கொண்டு பரிமாறுகிறோம். எங்களின் பணியாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண் கொடுத்து அவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே இறுதிவரை பரிமாற வைப்பதுண்டு. இதனால் பரிமாறும் போது குழப்பமில்லாமல் நேர்த்தியான முறையில் மக்களுக்கு சேவையளிக்க ஒரு சில சிஸ்டமாட்க் முறைகளையும் கையாள்கிறோம். இது எங்களின் வாடிக்கையாளர்களின் மத்தியில் எங்களின் மீது நன்மதிப்பினைப் பெற்றுத் தந்தது. இத்தோடு பிரத்யேகமாக தீபாவளி அல்லது சீர் கொடுப்பதற்காக இனிப்பு வகைகளையும் ஆர்டரின் பெயரில் தற்போது செய்து வருகிறோம்.' என கூறினார்.

'ஒரு சிலர், இன்றும் உணவுகளில் பாரம்பரியம் காண்பதுண்டு. எனவே, அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களின் பிரிவனரின் மத்தியில் பிரபலமான பாரம்பரிய உணவு வகைகளை குறிப்பிட்ட மாஸ்டர்களைக் கொண்டே தயார் செய்து பரிமாறிவருகிறோம். எங்களின் மற்றொரு முக்கிய அம்சமாக Buffet முறையில் உணவுகளை பரிமாறுகிறோம். இதற்கென செட்டப்களை நாங்களே அமைத்து சிறப்பான முறையில் செய்கிறோம்.' என மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு : 9994381800

Tags: News, Madurai News, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top