வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் டாக்டர். மீனாட்சி!

வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் டாக்டர். மீனாட்சி!

மனித வாழ்க்கையை மேம்படுத்தும் எத்தனையோ தெய்வீகக் கலைகள் இவ்வுல கில் இருந்தாலும் கோட்டு மொழி என்று சொல்லப்படுகின்ற ஜப்பானியக் கலை, தனித்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இக்கலையில் சர்வதேச மாஸ்டர் என்ற அடையாளத்தைத் பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்களுக்கு தீக்ஷை அளித்து இக்கலையை இவ்வுலகம் முழுவதிற்கும் பரவ தன்னாலான சேவையினை தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்து வருகிறார் Dr.A.மீனாட்சி. MBBS. DGO., அவரிடம் இந்த கலையைப் பற்றி பாமரர்களுக்கும் புரியும் வகையில் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.

“இந்த ஜப்பானியக் கலை ஒரு அற்புதமான தெய்வீகத் தன்மையுடையது. தமிழ், ஆங்கிலம், உருது, ஹிந்தி, பிரெஞ்சு என ஏராளமான மொழிகள் இருக்கின்றது. ஆனால், மனிதர்களுக்கு சில மொழிகள் மட்டுமே தெரியும். பல மொழிகள் தெரிவ தில்லை. இவற்றையெல்லாம் விட நமக்கு தெரியாத ஒரு மொழி இருக்கிறது. அதுதான் கோட்டு மொழி..! கோட்டு மொழியை கற்றுக்கொண்டால் இந்த உலகத்தையே ஆளலாம். உங்கள் கையில் இருக்கும் கைரேகை உருவத்தில் அந்த கோட்டு மொழி இருக்கிறது. கையில் இருக்கின்ற சில கோடுகளைக் கொண்டு எப்படி சாதனை செய்யவேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்கும் முறை தான் இந்த ஜப்பானிய கலை. இது, இந்த உலக மகாசக்தியை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்வதே ஆகும். இதில் தீக்ஷை என்பது மிகமிக முக்கியம். இந்த தீக்ஷையை வைத்துத்தான் இந்த கலையே இருக்கிறது. இந்த தீக்ஷையை நான் கடந்த இருபத்தைந்து வருடங்களாக பல லட்சம் பேருக்கு கொடுத்துக் கொண்டு வருகிறேன்.

இதில் பலர் என்னிடம் இந்த கலையால் என்ன பயன்? என கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு நான் பதில் அளிக்கும் போது, எல்லா மனிதர்களுக்கும் எல்லாமும் தேவைப்படுகிறது. வியாபாரம், கல்யாணம், குழந்தைகள், அதிகமான சம்பளம், அதிகாரம் செய்வது, மற்றவர்களுக்கு உதவுவது என பல ஆசைகள் மனதில் இருக்கும். இவ்வளவு ஆசையும் நிறைவேற வேண்டுமெனில், அது ரெய்கியினால் தான் முடியும். அதாவது இந்த கலையை கற்றுக்கொண்டால் தான் இவையெல்லாம் நடக்கும். ஏனென்றால், நம்மைச் சுற்றி இருப்பது ஒரு மின்காந்த சக்தி. அத்துடன் பூமி ஒரு காந்தம். அதை நோக்கி எப்போதும் மின்சக்தியானது சுற்றிக் கொண்டே இருக்கும். அது மட்டுமில்லாமல், சூரியனிடமிருந்தும் சக்தியை எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு அளவுக்கதிகமாக இருக்கின்ற மின்காந்த சக்தியை வைத்து எப்படி நாம் நம்முடைய உடலை சக்தியூட்ட போகிறோம் என்பதனை விளக்குவதுதான் இந்த கலை.

இதன் மூலமாக நாம் எப்படியெல்லாம் இந்த பிரபஞ்ச சக்தியோட இணைந்து கொள்ளலாம், எப்படி அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கற்றுத் தரும் கலைதான் இந்த கோட்டு தத்துவம் என்று சொல்கிறோம். சில கோடுகளை நாம் மந்திரங்களாக வரையும் போது அவை கோட்டு மொழியாகி விடுகிறது. இதன் மூலம் மனிதர்களுக்கு அளவற்ற சக்தி கிடைக்கிறது. இதன் பிறகு நமக்கு என்ன தேவையோ அதனை இந்த பிரபஞ்சத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

சரி, இதனால், தனிப்பட்ட முறையில் நமக்கு என்ன பயன் என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நம் மால் உடற்பயிற்சிகள் எதை யுமே சரியாக செய்ய முடிவ தில்லை. அப்படியே செய்தா லும், அதை தொடர்ந்து செய்ய முடிவதில்லை. இந்த மாதிரியான சமயங்களில் ரெய்கி மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் போதும். நம் உடலில் உள்ள சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவுமே நம்மை பாதிக்காது. மிகவும் ஆரோக்கியமாக வாழலாம்.

இதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்று கேட்டால்... முதலில் உங்களை சுற்றியுள்ள ஆரோவினைக் கண்டறிவோம். அதாவது உங்களை சுற்றியிருக்கும் மின்காந்த சக்தி குறித்து ஒரு சோதனையை மேற்கொள்வோம். இதற்கு காரணம்... நம்மிடம் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், எவ்வளவு சக்தியை நம்மிடம் சேர்க்க வேண்டும் என்றும், அந்த சக்தியை எவ்வாறு அதிகமாக்கலாம் என்றும் அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு பசி எடுக்கிறது. இரண்டு இட்லி தான் இருக்கிறது. அந்த இரண்டு இட்லியை உண்டும் பசி தீரவில்லை. மேலும், ஆறு இட்லி கிடைத்தால் பசி அடங்கிவிடும் என்று தோன்றுகிறது. பின், அதற்கேற்றாற்போல, உணவு எடுத்துக் கொள்கிறோம். பசி அடங்குகிறது.

இதைப்போலதான், நாங்கள் முதலில் ஆரா ஸ்கேனிங் என்ற சோதனையை செய்கிறோம். இதன் மூலமாக, உங்களுக்கு தேவையான எண்கள், வண்ணங்கள் மற்றும் பொருட்களை கூறிவிடுவோம். அதன்பின், நீங்கள் வசிக்கும் வீட்டை பற்றி உங்களிடம் இருந்து அறிந்து கொள்வோம். ஏனென்றால், நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கும் உயிர் இருக்கும். அதற்கும் செயல்கள் இருக்கும். உங்களுடைய எண்ணங்கள் உங்கள் வீட்டை பாதிக்கும். அதே சமயத்தில், உங்கள் வீட்டினால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறாமல்கூட போகலாம். ஏனென்றால், வீட்டின் அடியில் ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு பெயர்தான் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ். இதனால், நீங்கள் குடியிருக்கும் வீட்டினுடைய சக்தி நன்றாக இருந்தால்தான் நீங்கள் நன்றாகயிருக்க முடியும். இதனால்தான் நாங்கள், நீங்கள் குடியிருக்கும் வீட்டினுடைய சக்தியினைப் பற்றி முதலில் அளந்து கொள்கிறோம்.

சிலபேர் வீட்டில், திடீரென வியாபாரத்தில் வீழ்ச்சி, விபத்து, குடும்பத்தில் குழப்பம் என்று ஏராளமான பிரச்சனைகள் ஒருசேர வந்து, பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இதற்கு காரணம் யாருக்கும் தெரியாது. இதற்கான காரணத்தை கண்டு பிடிப்பதுதான் ஆரா ஸ்கேனிங். அதனால், நாங்கள் உங்களையும் உங்கள் வீட்டிலுள்ள ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்ஸையும் ஆரா ஸ்கேனிங் மூலமாக கண்டுபிடிக்கிறோம்.

உங்களுக்கு கோட்டு மொழித்தத்துவம், ஆரா ஸ்கேனிங் மற்றும் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்ஸிற்கான ஆரா ஸ்கேனிங் என்ற மூன்று விசயத்தையும் நாங்கள் செய்து தருகிறோம்.

டாக்டர். மீனாட்சி அம்மா அவர்களை சந்தித்து, தங்களின் பிரச்சினைகளைக் கூறி, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து வளமான வாழ்க்கையைப் பெற்று பயனடையுங்கள். ஆலோசனை பெறவும், பயிற்சி வகுப்புகளில் பங்கு பெறவும்.

தொடர்புக்கு:

Dr.A.Meenakshi  M.B.B.S., D.G.O.,

Founder: Energy Nest

Chennai, Bangalore, Srilanka, Madurai

9845533655, 8754557755, 9341227211

 

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top