69 முதல் 699 வரை ஈசியா வாங்கலாம்!

69 முதல் 699 வரை ஈசியா வாங்கலாம்!

ஆணாக இருந்தாலும்சரி, பெண்ணாக இருந்தாலும்சரி ஆடைகள் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். அதுவும் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பண்டிகை காலங்களில் அதிரடியாக தள்ளுபடி ஆஃபர்கள் கிடைப்பதால் கூட்டம் அலைமோதும். எனினும் இன்றைய இளைஞர்கள் பிராண்டட் ஆடை என்பதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் பிராண்டடாகவும் இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் தேவை பூர்த்தியடையும் வகையில் ஒரு இடம் மதுரையில் இருக்கிறதா என்றால், நிச்சயம் ஆம்ம்ம்ம்!!!!! என்றே சொல்லலாம். லைப் ஸ்டைல், மேக்ஸ், ஸ்ப்லாஸ் வரிசையில் மதுரையில் புதுவரவாக தோன்றியுள்ளது லேண்ட்மார்க் குழுமத்தின் ‘ஈசிபை’ நிறுவனம்.

லைப் ஸ்டைல், மேக்ஸிற்கு இணையான தரத்திலேயே ஆடவர், பெண்கள் குழந்தைகள் என அனைவருக்குமே ஆடைகளை வைத்திருந்தாலும் இவர்களின் டேக்-லைன் நம்மை அசத்துகிறது. அதுதான் 69 முதல் 699 வரை... 69-699 ரூபாய் வரையில் அசத்தான ஆடைகளை இன்றைய ட்ரெண்ட் செட்டராக திகழ வைக்கிறது. இவர்களின் இந்த அதிரடி விற்பனையையும், ஆஃபர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும் சின்ன சொக்கிகுளத்தில் அமைந்துள்ள ‘ஈசிபை’ மதுரையின் கிளை மேலாளர் திரு. சாகுல் ஹமீது அவர்களை சந்தித்தோம்.

’லேண்ட்மார்க் நிறுவனத்தின் தலைமையகம் துபாய். இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தன்னுடைய தயாரிப்புகளாக பேபிஷாப், ஸ்ப் லாஸ், மேக்ஸ், லைப்- ஸ்டைல் என ஆடை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் பிரபலமான பிராண்ட்களின் ஒன்றான லேண்ட்மார்க் தயாரிப்புகள் இன்று இளைஞர்களால் அதிகளவில் விரும்பப்படுகிறது. லேண்ட்மார்க் நிறுவனத்தைப் பொருத்தளவில், எல்லா விதமான மக்களையும் தன்னுடைய வாடிக்கையாளர்களாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் குறிக்கோள். எனவே, மெட்ரோ நகரங்களில் லைப்-ஸ்டைலையும், அர்பன் என்றழைக்கப்படும் நகரங்களில் மேக்ஸ்-சையும், அதற்கு அடுத்தப்படியாக இருக்கும் நகரங்களில் ஈசிபையையும் அமைத்துள்ளனர்.

இந்த ‘ஈசிபை’ 2014- ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 42 கிளையோடு செயல்பட்டுவருகிறது. தமிழகத்தில் சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை. அதனைத் தொடர்ந்து இனிவரவிருக்கும் நாட்களில் கோவை ப்ரூக்ஃபீல்ட் மாலில் இந்த மாதம் துவங்கப்படவுள்ளது.

எனக்கு மதுரைதான் சொந்த ஊர், சில ஆண்டுகள் துபாய் லேண்ட்மார்கில் பணியாற்றிவிட்டு தற்போது இங்கு கிளை மேலாளராக இருக்கிறேன். அன்றைக்கும் இன்றைக்கும் மதுரை இளைஞர்கள் ஸ்டைல் மற்றும் ஆடை விருப்பத்தில் அதிகளவிலான மாற்றத்தை காண முடிகிறது. இன்று அதிகப்படியாக பிராண்டட் ஆடைகளுக்கும் ஃபேஷனுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இன்று நாம் காணும் இந்த மாற்றத்தைத்தான் லேண்ட்மார்க் குழுமமும் கண்டுள்ளது. அதனாலேயேதான் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களிலும் தங்களுக்கென  வாடிக்கையாளர்கள் இருக்கவேண்டுமென்பதற்காக 69 முதல் 699 வரை என்கிற ஒரு ஸ்லோகனோடு குறைந்த விலையில் ஆடைகளை விற்பனை செய்துவருகிறார்கள்.

தொடர்புக்கு: 8124927216

Tags: News, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top